மருத்துவப் படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு: இன்று தொடங்குகிறது!


எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவபடிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

முதல் நாளான இன்று சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. நாளை முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இந்த கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள், நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு மற்றும் நீட் மதிப்பெண் அட்டை, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை கட்டாயம் ‌கொண்டு வர வேண்டும். அதே போல 6 முதல் 12ஆம் வகுப்பு வரைக்கான BONAFIDE CERTIFICATE, ஆதார் அட்டை, ஜாதிச் சான்றிதழ், ரேசன் கார்டு அல்லது பாஸ்போர்ட் ஆகியவற்றை சமர்ப்பிப்‌பது அ‌வசியம். 

முதல் பட்டதாரி மாணவர்கள் அதற்கான சான்றிதழைக் கட்டாயம் கொண்டு வர வேண்டும். மாணவர்கள் உடன்‌‌ வரும் பெற்றோரும் ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை கொண்டு வர வேண்டும். வேறு மாநிலத்தில் பயின்ற மாணவர்கள் அதற்கான BONAFIDE CERTIFICATE கொண்டு வருவது கட்டா‌யம்.‌ இந்த மாணவர்‌கள் தங்களின் இருப்பிடச் சான்றிதழ்களோடு பெற்றோரின் இருப்பிடச்சான்றையும் கட்டாயம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்‌ளது.

POST COMMENTS VIEW COMMENTS