குரூப் 4 தேர்வு முடிவுகள் ஜூலை இறுதியில் வெளியீடு


குரூப் - 4 தேர்வு முடிவுகள் ஜூலை கடைசிவாரத்தில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 

கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சு பணியாளர் உள்ளிட்ட 9ஆயிரத்து 351 காலி பணியிடங்களுக்கான குரூப் - 4 தேர்வுகள் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வுகளை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதியிருந்தனர். இதுதொடர்பான முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் குரூப் - 4 தேர்வு முடிவுகள் ஜூலை மாத கடைசி வாரத்தில் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குரூப் ஒன் தேர்வு முடிவுகள் செப்டம்பர் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS