வெளியானது நீட் தேர்வு முடிவுகள்


மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மருத்துவம், பல்மருத்துவம், இயற்கை மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவம் போன்றவற்றில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு மே மாதம் 6-ம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் இருந்து 13 லட்சம் பேர் இந்த தேர்வில் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர்.

இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. 2 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என முதலில் கூறப்பட்ட நிலையில் 12.30 மணிக்கே முடிவுகள் வெளியாகி உள்ளன. www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்

POST COMMENTS VIEW COMMENTS