10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு


10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகுகின்றன.

தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 16-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி‌ வரை நடைபெற்றது. தேர்வுத்தாளை திருத்தும் பணி நிறைவடைந்துள்ள நிலையில் நாளை தேர்வு முடிவுகள் வெளியாகிறது. காலை 9.30 மணி அளவில் இணைய தளத்தில் முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

www.tnresults.ac.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். தமிழகம் மற்றும் புதுச்சேரியில்‌ தனித்தேர்வர்கள் உட்பட 10 லட்சத்து ஆயிரத்து 140 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளனர். நாளை வெளியாகவுள்ள தேர்வு முடிவை அவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS