+2 பொதுத்தேர்வு முடிவுகள் : மாணவ -மாணவிகளின் தேர்ச்சி விகிதம்


2017-2018-ம் ஆண்டிற்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணைய தளத்தில் இன்று வெளியிடப்பட்டது. 

2017-2018-ம் ஆண்டிற்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற்றது.  இதனைத்தொடர்ந்து அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனையெடுத்து தேர்வுமுடிவுகளிள்  மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.1 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 94.1 சதவீத மாணவிகளும், 87.7 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 1,907 உள்ளது. 100 சதவிகித தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 238. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பாடவாரியாக தமிழ் -96.85% ஆங்கிலம்-96.97% கணிதம்- 96.1%  இயற்பியல்- 96.4% வேதியியல்- 95.0% உயிரியியல் - 96.34 தாவரவியல்- 93.9% விலங்கியல்- 91.9% வணிகவியல்- 90.30% கணக்குபதிவியல் - 91% கணினி அறிவியல்- 96.1%  தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.


இதனைதொடர்ந்து 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 97 சதவீத தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தையும், 96.3 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 96.1 சதவீத தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. 

POST COMMENTS VIEW COMMENTS