இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியீடு


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகின்றன. முன்னெப்போதும் இல்லாதபடி, அனைத்து முடிவுகளும் இணையதளத்தின் மூலம் மட்டுமே வெளியிடப்படுகின்றது.

2017-2018-ம் ஆண்டிற்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற்றது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி தமிழகத்தில் 74 மையங்களில் நடைபெற்றது. இப்பணி நிறைவுபெற்றதையடுத்து மாணவர்களின் மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றும் பணி நடைபெற்றது. தொடர்ந்து அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றது.

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய மூன்று இணையதளங்களிலும் முடிவுகளை அறியலாம். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் இயங்கும் தேசிய தகவலியல் மையத்திலும், அவரவர் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்களிலும் தேர்வு முடிவுகளை அறிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களது பள்ளிகளில் வழங்கிய கைபேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைபேசி எண்ணிற்கும் தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் என அரசுத் தேர்வுத் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.


 

POST COMMENTS VIEW COMMENTS