எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம் !


தமிழக அரசின் எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

தமிழக அரசின் எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒரே கல்வி நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தில் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி துறையில் மிக சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும், இயக்குநர்களையும் உருவாக்கி வரும் நிறுவனமாகும். இந்நிறுவனம் 2016-2017ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க பெற்று கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டு, இந்தியாவிலேயே முதன் முறையாக திரைப்பட தொழில்நுட்பங்களுக்கென இளங்கலை-காட்சிக்கலை (Bachelor of Visual Arts) எனும் பட்டப்படிப்புகளை பயிற்றுவித்து வருகிறது.

இதற்கான 2018-2019ஆம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை 10.05.2018 முதல் கல்லூரியிலிருந்து நேரில் பெற்றுக்கொண்டு விண்ணப்பிக்கலாம் அல்லது இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்கள் அறிய :

http://www.tndipr.gov.in/television-traininginstitute.aspx                       

http://www.tn.gov.in/miscellaneous/mgrinst/mgrgfti_prospectus_2018_2019.pdf
     

POST COMMENTS VIEW COMMENTS