1, 6, 9,11-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் வெளியீடு


புதிய பாடத் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட, பாடப் புத்தகங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார்.

1, 6, 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்கள் இன்று வெளியிடப்பட்டன. தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , புதிய பாடப்புத்தகங்களை வெளியிட்டார். வரும் கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டங்கள் அமலுக்கு வரவுள்ளன. புதிய பாடத்திட்ட புத்தகங்கள் குறித்து ஜூன் ஒன்றாம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளன.

தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ‌பள்ளிக் கல்வித்துறை பாடத்திட்டங்கள், சிபிஎஸ்இ பாடத்திட்டங்களுக்கு மேலாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2, 7, 10, 12 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் 2019-20 கல்வியாண்டில் மாற்றப்படவுள்ளன. மற்ற வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்கள் அதற்கு அடுத்த கல்வியாண்டில் அமல்படுத்தப்பட்டன.

POST COMMENTS VIEW COMMENTS