நாடாளுமன்றத்தில் பயிற்சி பெற வாய்ப்பு


மக்களவையில் பட்டதாரி மாணவர்கள் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த முக்கிய பிரச்னைகளும் மக்கள் பிரதிநிதிகளால் விவாதிக்கப்படும் இடம் நாடாளுமன்றம். நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகள் உண்டு. மக்களவையின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை மாணவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில், ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்படும் பட்டதாரி மாணவர்களுக்கு குறிப்பிட்ட கால அளவு இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. எம்.பி.க்களிடம் பேசவும், பாராளுமன்ற பணிகளில் பங்கேற்கவும் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தாண்டும் மக்களவையில் இன்டர்ஷிப் பயிற்சி பெறுவதற்கு பட்டதாரி மாணவர்ளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3 மாத கால இன்டர்ன்ஷிப் பயிற்றி மற்றும் ஒருமாத கால இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்ப்பட்டுள்ளது. பயிற்சி காலத்தில் மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்படும். sri.nic.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மே 4ம் தேதி மாலை 5 மணிக்குள் மாணவர்கள் விண்ணப்பத்தை பதிவு செய்தல் அவசியம்

கூடதல் விவரங்களுக்கு sri.nic.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

POST COMMENTS VIEW COMMENTS