நாட்டிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு


இந்தியாவின் மிகச்சிறந்த பொறியியல் கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி தொடர்ந்து 3-வது ஆண்டாக தேர்வாகியுள்ளது.

2018ம் ஆண்டில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். அதில், நாட்டிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐஐடி-எம்) தேர்வாகியுள்ளது. ஐஐடி மும்பை 2-வது இடத்தையும், ஐஐடி டெல்லி 3-வது இடத்தையும் பிடித்துள்ளன. ஒட்டுமொத்தமாக அனைத்து பிரிவுகளையும் சேர்த்து சிறந்த கல்வி நிறுவனமாக பெங்களூருவில் உள்ள ஐஐஎஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பொறியியல் பிரிவில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 8-வது இடத்தில் உள்ளது. சிறந்த மருத்துவக்கல்லூரிகள் பிரிவில் வேலூர் சிஎம்சி 3வது இடத்தை பிடித்துள்ளது. நிர்வாகவியல் கல்வியியல் பிரிவில் அகமதாபாத் ஐஐஎம் முதலிடம் பிடித்தது. பல்கலைக்கழகங்கள் பிரிவில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 13வது இடம் பிடித்துள்ளது. சிறந்த மருத்துவக் கல்லூரியாக டெல்லி எய்ம்ஸும், சிறந்த சட்டக்கல்லூரியாக பெங்களூருவில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகமும் தேர்வாகியுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS