சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பிற்கு மறுதேர்வு இல்லை: மத்திய அரசு


சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வுக்கு முன்னதாகவே சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொருளாதாரப் பாடம் மற்றும் 10-ஆம் வகுப்பு கணிதப் பாடத்தின் வினாத்தாள்கள் கசிந்ததாக புகார் எழுந்தது. இதனால் 12-ஆம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கு மறுதேர்வு ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல 10-ஆம் வகுப்பு கணிதத் பாடத்துக்கு மறுதேர்வு நடத்தலாமா..? வேண்டாமா..? என ஆய்வு செய்யப்பட்டு அப்படி ஒருவேளை மறுதேர்வு நடத்தப்படுமாயின் அதன் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சிபிஎஸ்இ சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. மறுதேர்வு நடத்தப்படுவதற்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர் அனில் ஸ்வரூப் இதனை உறுதி செய்துள்ளார். மறுதேர்வு நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS