சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் லீக்கானது..!


சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான கணக்குப்பதிவியில் கேள்வித்தாள்கள் வாட்ஸ் ஆப்பில் லீக் ஆகியுள்ளது.

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் 5ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு கணக்குப்பதிவியில் தாள் 2-க்கான கேள்வித்தாள் வாட்ஸ் ஆப்பில் லீக் ஆகியுள்ளது. இத்தேர்வை இன்று மாணவர்கள் எழுதி வரும் அதே நேரத்தில் கேள்ளித்தாள்கள் வாட்ஸ் ஆப்பிலும் லீக் ஆகியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. ஆனால் கேள்வித்தாள் எப்போது லீக் ஆனது என்பது குறித்த விவரங்கள் தெரியவரவில்லை. டெல்லியின் கல்வி அமைச்சர் மணிஷ் சிசோடியாவும் கேள்வித்தாள் சமூக வலைத்தளங்களில் லீக் ஆகி இருப்பதை உறுதி செய்துள்ளார். இதுவரை தேர்வு ரத்து செய்யப்பட்டது குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை.

இதுதொடர்பாக விசாரணை நடத்த டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. வினாத்தாளை வெளியிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லியின் கல்வி அமைச்சர் மணிஷ் சிசோடியாவும் தெரிவித்துள்ளார். தேர்விற்கு முன்னதாக வினாத்தாள் லீக் ஆனது உறுதி செய்யப்பட்டால் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறப்படுகிறது.

POST COMMENTS VIEW COMMENTS