ரயில்வேயில் வேலை.. இதுவரை 1.50 கோடி பேர் விண்ணப்பம்


ரயில்வேயில் அறிவிக்கப்பட்டுள்ள 90,000 பணியிடங்களுக்கு இதுவரை 1.5 கோடி பேர் விண்ணப்பம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

அரசு வேலைக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 10ம் வகுப்பு தகுதியிருந்தால் போதும் என்ற வேலைக்கு கூட, முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கின்றனர். அந்தளவிற்கு நாளுக்கு நாள் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. தனியார் துறையில் நடக்கும் ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கையும் மக்களை அரசாங்க வேலை மீது அதிக கவனம் செலுத்த வைக்கிறது.

இந்நிலையில் ரயில்வேயில் அறிவிக்கப்பட்டுள்ள 90,000 பணியிடங்களுக்கு இதுவரை 1.5 கோடி பேர் விண்ணப்பம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. ரயில்வேயில் குரூப் சி, குரூப் டி பிரிவில் உள்ள 63,000 பணியிடங்களுக்கு முதலில் அறிவிப்பு வெளியானது. அதனைத்தொடர்ந்து மீண்டும் 26,500 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க மார்ச் 31ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பிக்க இன்னும் 18 நாட்கள் இருக்கும் நிலையில் இதுவரையில் 1.50 கோடி பேர் விண்ணப்பம் செய்திருப்பதாக ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் பலர் விண்ணப்பிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ரயில்வே சார்பில் ஏற்கனவே பல பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியாகி வேலையாட்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இதுவரை இல்லாத அளவு இந்த முறைதான் அதிகப்பட்சமாக 1.50 கோடி பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய ரயில்வே சார்பில் கூறப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS