கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்..!


ரயில்வே கோச் நிறுவனத்தில் 195 அப்ரண்டீஸ் பயிற்சி

ரயில்வே கோச் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர விரும்புவோர்  24 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஃபிட்டர், வெல்டர், மெஷினிஸ்ட், பெயிண்டர், கார்பெண்டர், மோட்டர் மெக்கானிக், எலெக்ட்ரீசியன், எலெக்ட்ரானிக் மெக்கானிக், ஏ.சி மெக்கானிக் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.03.2018
மேலும் விவரங்களுக்கு: www.rcf.indianrailways.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

இந்திய தரநிலைப் பணியகத்தில் சயிண்டிஸ்ட் வேலை

இந்திய தரநிலைப் பணியகத்தில் சயிண்டிஸ்ட் பணியில் சேர விரும்புவோர்  35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மெக்கானிக்கல், மெட்டலர்ஜி, சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கெமிக்கல், ஃபுட் டெக்னாலஜி, டெக்ஸ்டைல் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.04.2018

மேலும் விவரங்களுக்கு: www.bis.org.in என்ற இணையதளத்தை அணுகலாம்

POST COMMENTS VIEW COMMENTS