ரயில்வேயில் 885 காலிப்பணியிடங்கள்: உடனே விண்ணப்பிக்கலாம்!


மத்திய ரயில்வே மற்றும் லக்னோ மெட்ரோவில் காலியாக உள்ள 885 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

ஜூனியர் இன்ஜினியர், ரயில் நிலைய கண்ட்ரோலர் மற்றும் ரயில் ஆபரேட்டர், உதவி மேலாளர், மக்கள் தொடர்பு உதவியாளர், அலுவலக கணக்கு உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வெழுத விரும்புவோர் மார்ச் 27ம் தேதிக்குள் ஆன்லைனில் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு உள்ளிட்டவைகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்களை லக்னோ மெட்ரோ இணையதளம் (http://www.lmrcl.com/)  மற்றும் மத்திய ரயில்வேயின் இணையளத்தில் (http://www.cr.indianrailways.gov.in/) தெரிந்து கொள்ளலாம்.

POST COMMENTS VIEW COMMENTS