டி.ஆர்.டி.ஓ., என்.பி.சி.சி. மற்றும் கெமிக்கல் நிறுவனங்களில் காலிப்பணியிடங்கள்!


டி.ஆர்.டி.ஓ., என்.பி.சி.சி., ராஷ்ட்ரியா கெமிக்கல் மற்றும் ஃபெர்டிலைசர்ஸ் ஆகிய நிறுவனங்களில் காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் நிரப்படவுள்ளனர்.

இந்திய அரசின் கீழ் இயங்கி வரும் டி.ஆர்.டி.ஓ (டிஃபன்ஸ் ரிசர்ச் & டவலெப்மெண்ட் ஆர்கனைசேஷன்) நிறுவனத்தில் டெக்னீசியன் பணியிடங்கள் நிரப்படவுள்ளன. இந்தப் பணியில் சேர விரும்புவோர் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 
    
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 28.03.2018 

மேலும் விவரங்களுக்கு: https://www.drdo.gov.in இதில் காணலாம்.

நேஷனல் பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்ரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் ஜூனியர் என்ஜினீயர் பணியிடங்கள் நிரப்படவுள்ளன. இப்பணியில் சேர விரும்புவோர் சிவில், எலெக்ட்ரிக்கல், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.03.2018

கூடுதல் விவரங்களை: https://eapplicationonline.com/NBCCAdvt072018/Document/Advertisement.pdf இங்கே பெறலாம்.

இதேபோன்று ராஷ்ட்ரியா கெமிக்கல் & ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் 154 பயிற்சிப் பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் சேர விரும்புவோர் வெல்டர், மெஷினிஸ்ட், எலெக்ட்ரீசியன், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் கெமிக்கல், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.03.2018

மேலும் விவரங்களுக்கு: http://203.199.79.251:3053/Uploads/Advt_English.pdf இதை கிளிக் செய்யவும்.
 

POST COMMENTS VIEW COMMENTS