ஆன்லைனில் பொறியியல் கலந்தாய்வு


 

2018- 19 கல்வியாண்டு முதல் பொறியியல் மாணவர் சேர்க்கை ஆன்லைனிலேயே நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் 21 ஆண்டுகளாக பொறியியல் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்ததாக தெரிவித்தார். ஆனால் தற்போது மாணவர்கள் வசதிக்காக, அவர்கள் சந்தேகங்களை முழுமையாகத் தீர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் ஆண்லைன் மூலம் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் என தெரிவித்துள்ளார். வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம் எனவும், ‌அதற்கான வசதி இல்லாதவர்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு மையம் அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார். சிறிய மாவட்டமாக இருந்தால் ஒரு இடம் என்றும் பெரிய மாவட்டமாக இருந்தால் 2 இடங்களில் மையங்கள் செயல்படும் என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
 

POST COMMENTS VIEW COMMENTS