குரூப் 4 தேர்வில் நிகழ்ந்த குழப்பம்: டிஎன்பிஎஸ்சி விளக்கம்


டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான கேள்வி ஒன்றுக்கு கொடுக்கப்பட்டிருந்த 4 தெரிவுகளும் தவறானவை என தெரியவந்துள்ளது.

தேசிய கீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள் குறித்த கேள்விக்கான விடைகளில் இந்த தவறு நேரிட்டுள்ளது. தாகூர் பிறந்தது 1861-ஆம் ஆண்டு மே மாதம் ஏழாம் தேதியாகும். ஆனால் தேர்வுத்தாளில் கொடுக்கப்பட்டிருந்த நான்கு தெரிவுகளிலும் அந்த விடை இடம்பெறவில்லை. இதனால் தேர்வெழுதியவர்கள் குழப்பத்திற்கு ஆளாயினர்.

இதனிடையே குரூப் 4 தேர்வு விடைகள் தொடர்பாக மாறுபட்ட கருத்து இருந்தால் தேர்வர்கள் தெரிவிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. உத்தேச விடை வெளியான பிறகு 7 நாட்களுக்குள் அதில் தவறேதும் இருந்தால் தெரிவிக்கலாம் எனவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS