வெளிநாட்டில் மருத்துவம் பயிலவும் நீட் அவசியம்!


வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்க விரும்புவோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறை கட்டாயமாக உள்ளது.

நீட் தேர்வின் அடிப்படையில் இந்திய மருத்துவப்படிப்புக்கான இடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்நிலையில் வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்கவும் நீட் கட்டாயமாக்கப்படவுள்ளது. இதுதொடர்பான ஆலோசனை இறுதிக்கட்டத்தில் உள்ளதாக சுகாதாரத்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி பயில தகுதி வாய்ந்த மாணவர்களை அனுப்புவதே இத்திட்டத்தின் நோக்கம் எனவும் அந்த உயரதிகாரி தெரிவித்தார். வெளிநாட்டில் மருத்துவம் பயின்று விட்டு வரும் மாணவர்களுக்கு நடத்தப்படும் தகுதித் தேர்வில் 15 சதவிகிதம் பேரே தேர்ச்சி அடைவதாகவும், இது மிகவும் ஆபத்தான போக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.

POST COMMENTS VIEW COMMENTS