தமிழ்நாடு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை 


தமிழ்நாடு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சிக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயங்கி வரும் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஒரு வருட அப்ரண்டீஸ் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். ஃபிட்டர், எலெக்ட்ரீசியன், எலெக்ட்ரானிக் மெக்கானிக், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், மெஷினிஸ்ட் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 
காலியிடங்கள்: 79 (பொது - 43, தாழ்த்தப்பட்டோர் – 15, ஓ.பி.சி – 21)
வயது வரம்பு: 24க்குள் 
விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.02.2018
விவரங்களுக்கு: https://www.iocl.com


எய்ம்ஸ்யில் 700 நர்ஸ் வேலை 
போபாலில் இயங்கி வரும் ஆல் இந்தியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸில் சீனியர் நர்சிங் ஆஃபிசர் மற்றும் நர்சிங் ஆஃபீசர் பணிகளை பூர்த்தி செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பி.எஸ்.சி நர்சிங் படிப்பை முடித்து இந்தியன் நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். அனுபவம் உள்ளவர்களும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். 21 லிருந்து 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 
விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.03.2018

விவரங்களுக்கு: https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/54823//Instruction.html
 

POST COMMENTS VIEW COMMENTS