நெட் தேர்வு தேதி அறிவிப்பு


2018ஆம் ஆண்டிற்கான நெட் தேர்வு தேதியை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணி வாய்ப்பை பெறுவதற்கு தேசிய அளவிலான ‘நெட்’ தகுதித் தேர்வு சிபிஎஸ்இ மூலம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. நடப்பாண்டு இந்தத் தேர்வு ஜூலை 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மார்ச் மாதம் 6ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்ய கடைசி நாள் ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி ஆகும். விண்ணப்பத்திற்கானக் கட்டணத்தை ஏப்ரல் 6ஆம் தேதி வரை செலுத்தலாம். கூடுதல் விவரங்களை http://cbsenet.nic.in என்ற இணையதளத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தெரிந்து கொள்ளலாம்.

POST COMMENTS VIEW COMMENTS