பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம் போல் இயங்கும்


தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் புதிய தலைமுறைக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார். முன்னதாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என வாட்சப் உள்ளிட்ட சமூக தளங்களில் தகவல் பரவியது. இதுதொடர்பாக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடந்தாண்டு ஜனவரி 17ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததாகவும், அந்த அறிவிப்பு தற்போது சமூக தளங்களில் உலா வருவதாகவும் அது இந்தாண்டு பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது.
 

POST COMMENTS VIEW COMMENTS