ரூ.59,000 சம்பளம்: எஸ்பிஐ வங்கியில் காலிப்பணியிடங்கள்


பொதுத்துறை வங்கிகளில் முக்கியமானதமாக கருதப்படும் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர், மற்றும் தலைமை மேலாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. மொத்தமாக 121 பணியிடங்களுக்காக இத்தேர்வு நடைபெற உள்ளது.

கல்வித்குதி

தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் குறைந்தபட்சம் PGDM/MBA அல்லது அதற்கு இணையான முதுநிலைப் படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ரெகுலர் கல்வி முறையில் முதுநிலை பட்டம் பெற்றிருத்தல் கட்டாயம்.

வயது தகுதி

மேலாளர் பதவிக்கு குறைந்தப்பட்சம் 25 வயது இருக்க வேண்டும். அதிகப்பட்சமாக 35 வயது இருக்கலாம். தலைமை மேலாளர் பதவிக்கு குறைந்தபட்சம் 25 வயதும், அதிக்கப்பட்சமாக 38 வயதும் இருக்கலாம். அரசு விதிகளின் படி வயது தளர்வும் வழங்கப்படும்.

ஊதிய விவரம்

மாதந்தோறும் 51,490 ரூபாயிலிருந்து அதிகப்பட்சமாக ரூ.59,170 வழங்கப்பட இருக்கிறது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் sbi.co.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். நேர்காணல் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS