2018ம் ஆண்டுக்கான பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், ந‌டப்பு ஆண்டில் நடத்தவுள்ள தேர்வு மற்றும் காலிப் பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த 9,351 காலிப்பணியிடங்களுக்கான குரூப் -4 தேர்வு வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகளைத் தவிர்த்து, 183 விவசாய அதிகாரிகள் பணியிடங்கள் மற்றும் 805 உதவி தோட்டக்கலை அதிகாரிகள், 158 வன பயிற்சியாளர் போன்ற பதவிகளுக்கான தேர்வுகளை நடத்த தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது.

இதற்கான தேர்வுகளை வரும் ஜூன் மாதத்தில் நடத்த உத்தேசித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதியில் 1,547 பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வுகளை நடத்த டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது. அதேபோன்று அக்டோபர் 14ஆம் தேதியில் 57 பணியிடங்களுக்கான குருப் -1 தேர்வை நடத்த தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS