10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் நாளை முதல்(ஜனவரி 2) தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அவகாசம் வழங்கியுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி., என அழைக்கப்படும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் துவங்க உள்ளது. இத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், ஆன்லைனில் டிசம்பர் 22ஆம் தேதி முதல் டிசம்பர் 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இதுவரை விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு புது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் ஜனவரி 2ம் தேதி முதல் ஜனவரி 4-ம் தேதி வரை தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வாணையம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS