பழங்குடியின மாணவர்களுக்கு மறுக்கப்படும் ஆங்கில வழிக்கல்வி?


கோவை மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு ஆங்கிவழிக்கல்வி நிறுத்தப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மீண்டும் அவர்களுக்கு ஆங்கில வழி கல்வி பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட வீரபாண்டி, பாலமலை, ஆனைக்கட்டி ஆகிய பகுதிகளில் பழங்குடியின நலத்துறை கட்டுப்பாட்டில் மூன்று உண்டு உறைவிட பள்ளிகள் இயங்கி ‌வருகின்றன. இந்த பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பழங்குடியின மக்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி நிறுத்தப்பட்டிருப்பது பற்றி அதிகாரிகள் கூறும் காரணம் மாணவர்களை இழிவுப்படுத்தும் வகையில் இருப்பதாக கண்டனம் தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்து அதற்கேற்றவாறு ஆங்கில வழிக்கல்வியை பயிற்றுவிக்கும் முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றும் ஆங்கிலம் பயில குறிப்பிட்ட மாணவர்கள் சிரமப்படுகிறார்கள் என்று கூறுவதை ஏற்க இயலாது எனவும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS