இன்று பிளஸ்-1, பிளஸ்-2 அரையாண்டு தேர்வு


தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு இன்று தொடங்குகிறது. 

பிளஸ்-1 மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்திருந்தது. இதனையடுத்து இறுதி தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டது.

அதன்படி பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு இன்று  தொடங்குகிறது. 23 ஆம் தேதி முடிவடையும். எஸ்.எஸ்.எல்.சி. அரையாண்டு தேர்வு வரும் 11 ஆம் தேதி தொடங்கி, 23 ஆம் தேதி முடிவடைகிறது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி வருகிற 21 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அன்று நடைபெற வேண்டிய தேர்வு அந்த தொகுதியில் உள்ள பள்ளிகளுக்கு பின்னர் அறிவிக்கப்படும். 

POST COMMENTS VIEW COMMENTS