அடுத்த ஆண்டு முதல் ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி தேர்ச்சி மதிப்பெண் மாற்றம்


ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண் வரம்பானது வருகின்ற 2018-19ஆம் கல்வி ஆண்டு முதல் குறைக்கப்பட உள்ளதாக அறிவிப்பு‌ வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி பள்ளிகளில் 2018-19ஆம் ஆண்டு தேர்விலிருந்து 9 மற்றும் 10ஆம் வகுப்பிற்கான தேர்ச்சி மதிப்பெண் மாற்றம் அடைகிறது. அதன்படி தேர்ச்சி மதிப்பெண் 35-ல் இருந்து 33 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளான, ஐஎஸ்சி தேர்வுகளில் 40 மதிப்பெண்ணுக்கு பதிலாக 35 மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக இந்திய பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் அறிவித்துள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS