ஆங்கில உச்சரிப்பு மேம்படுத்‌த காஞ்சிபுரத்தில் 70 அரசு பள்ளிகள் புது முயற்சி


அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்தும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 70 அரசுப்பள்ளிகள் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில உச்சரிப்பு திறனை மேம்படுத்த, காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 1716 பள்ளிகளில் 70 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு அவற்றின் சுவர் மற்றும் வகுப்பறைகளில் ஆங்கில வார்த்தைகள் எழுதி, படங்கள் வரையப்பட்டுள்ளன. இதற்கு தொடக்கமாக இருந்தது திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. மாணவர்களின் ஆங்கில உச்‌சரிப்பை மேம்ப‌டுத்துவதற்காக பள்ளி தலைமை ஆசிரியர் குமார் இத்தகைய முயற்சியை முன்னெடுத்தார்.

மாணவர்களின் ஆங்கில அறிவை வளர்ப்பதற்காக அன்றாட வாழ்க்கையில் உபயோகிக்கப்படும் வார்த்தைகளை வகுப்பறையின் ஒரு சுவற்றிலும், ஆங்கில புத்தகத்தை சரளமாக படிக்க தேவையான வார்த்தைகள் மற்றும் உச்சரிப்புகளுக்கான வார்த்தைகளை மற்றொரு சுவற்றிலும் எழுதி வைத்துள்ளனர்.

2017 - 18 ஆம் கல்வி ஆண்டில் ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்தும் முயற்சியில் தமிழகம் முழுவதும் 2184 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்காக, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 3.27 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

POST COMMENTS VIEW COMMENTS