புதிய தலைமுறையின் வெற்றிப்படிகள் நிகழ்ச்சி: 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு


மன்னார்குடியில் புதிய தலைமுறையும், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய வெற்றிப்படிகள் நிகழ்ச்சியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமும், புதிய தலைமுறையும் இணைந்து வெற்றிப்படிகள் நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் மன்னார்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். புதியதலைமுறை தொலைக்காட்சியின் மண்டல மேலாளர் சரவணன் தொடக்க உரையாற்றினார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணைவேந்தர் சுந்தர் மனோகரன் தலைமை வகித்து மாணவர்களுக்கு தேர்வு குறித்து ஆலோசனை வழங்கினார்.

POST COMMENTS VIEW COMMENTS