அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் இன்று நடைபெறும்: உயர்கல்வித்துறை செயலாளர்


அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் திட்டமிட்டப்படி இன்று நடைபெறும் என உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக, ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் திட்டமிட்டபடி இன்று நடைபெறும் என உயர்கல்வித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS