ஐஏஎஸ், ஐபிஎஸ்க்கான முதன்மை தேர்வு: தமிழ்நாட்டில் 900 பேர் பங்கேற்பு


ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு இன்று நடைபெறுகிறது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்த தேர்வுகள் இன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெறும். இவர்‌ளுக்கான முதல்நிலைத் தேர்வுகளில் 13,350 பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 900 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தியா முழுவதும் 24 நகரங்களில் இந்த முதன்மைத் தேர்வு நடைபெறும் நிலையில், தமிழகத்தில் சென்னையில் மட்டும் தேர்வு நடைபெறுகிறது. அதில், 900 பேர் மெயின் தேர்வை எழுதுகின்றனர்.

சென்னை எழும்பூர், அசோக் நகர் ஆகிய இடங்களிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெறும் இந்தத் தேர்வில் கலந்துகொள்பவர்கள் தேர்வு மையத்திற்கு செல்போன், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவைகளைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது,

POST COMMENTS VIEW COMMENTS