குரூப் -1 தேர்வு இன்றும் நடைபெறுகிறது



சென்னையில் 42‌ மையங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வு இரண்டாவது நாளாக இன்றும் நடைபெறவுள்ளது. 

தமிழகத்திலுள்ள 85 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக இந்தத் தேர்வு நடைபெறுகிறது. வழக்கமாக குரூப் - 1 தேர்வு ஒரு நாள் மட்டுமே நடைபெற்று வந்த நிலையில், பிரதான தேர்வு இது என்பதால் நேற்று தொடங்கி நாளை வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.‌ இந்தத் தேர்வை எழுத 4 ஆயிரத்து 602 பேர் பதிவு செய்துள்ளனர். காவல்துறை கண்காணிப்பாளர், துணை ஆட்சிய‌ர் மற்றும் வணிகத்துறை துணை அலுவலர் ஆகியோரின் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

POST COMMENTS VIEW COMMENTS