பள்ளி நேரம் 30 நிமிடம் குறைப்பு: புதுவையில் இன்று முதல் அமல்


புதுச்சேரியின் நகர்ப்புறத்தில் இயங்கும் அரசு பள்ளிகளில் உணவு இடைவேளை நேரக் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. 

இதற்குமுன் புதுச்சேரி அரசுப் பள்ளிகளின் உணவு இடைவேளை ஒரு மணிநேரம் 35 நிமிடங்களாக இருந்தது. தற்போது ஒரு மணி நேரம் 5 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த முறைப்படி காலை 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கி, பகல் 12.25க்கு உணவு இடைவேளை விடப்படும். மீண்டும் 1.30க்கு வகுப்புகள் தொடங்கும். அரை மணி நேரம் உணவு இடைவேளை குறைக்கப்பட்டதால், வழக்கமான நேரத்தை விட அரைமணிநேரம் முன்னதாக 3.45-க்கே பள்ளி நேரம் முடிந்துவிடும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. காலாண்டு தேர்வு முடிந்து அரசு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், இன்று முதல் மாற்றி அமைக்கப்பட்ட நேரம் நடைமுறைக்கு வந்துள்ளது. 

POST COMMENTS VIEW COMMENTS