மருத்துவ படிப்பு சேர்க்கையில் சென்னை முதலிடம்!


தமிழகத்தின் மருத்துவ படிப்பிற்கான இடங்களில், 7 இடங்களுக்கு ஒன்று என்ற விகிதத்தில் சென்னை இடம் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சென்னையிலிருந்து 113 சேர்க்கை நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு 471 என்ற எண்ணிக்கையில் மருத்துவ சேர்க்கை அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 315 சதவிகிதம் கூடுதலாகும். சென்னைக்கு அடுத்த படியாக இரண்டு மடங்கு கூடுதல் மாணவர் சேர்க்கையுடன் வேலூர் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. 80 சதவிகித கூடுதல் மாணவர் சேர்க்கையுடன் கோயமுத்தூர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த ஆண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் 957 இடங்களைப் பிடித்த நாமக்கல், இந்த முறை 109 இடங்களை மட்டுமே பெற்று கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 338 இடங்களைப் பெற்றிருந்த கிருஷ்ணகிரி, இந்த ஆண்டு 82 இடங்களுடன் கடைசிக்கு முந்தைய இடத்திலும், திருச்சி, திருவள்ளூர், தர்மபுரி, ஈரோடு, பெரம்பலூர் ஆகிய நகரங்கள் மருத்துவ சேர்க்கை எண்ணிக்கையில் பின்னடைவையும் சந்தித்துள்ளன. ஆனால் கோவை, நெல்லை, கடலூர், மதுரை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திண்டுக்கல், திருவண்ணாமலை, திருவாரூர், சிவகங்கை, நீலகிரி, திருப்பூர் ஆகிய நகரங்களின் மருத்துவ மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS