பாடத்திட்ட மாற்றம் செப்டம்பரில் நிறைவு: செங்கோட்டையன்


பாடத்திட்டங்களை மாற்றியமைக்கும் பணி செப்டம்பர் மாத இறுதிக்குள் நிறைவடையும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

சென்னை சேப்பாக்கத்தில் ஆசிரியர் தின விழாவில் பேசிய அமைச்சர் இந்த தகவலை கூறியுள்ளார். மத்திய அரசின் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு பாராட்டும் வகையில் தமிழகத்தின் பள்ளி கல்வித் திட்டம் உள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS