போ‌லி சான்றிதழ் மூலம் மருத்துவ படிப்பில் சேர ‌முயற்சி: மாணவருக்கு சம்மன்


போலி இருப்பிடச்சான்று மூலம் மருத்துவப் படிப்பில் சேர முயன்ற மாணவர் ஆஷிக் கலைமானுக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு போலி இருப்பிட ‌சான்றிதழ் தயார் செய்து கேரள மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதாக, திண்டிவனத்தை சேர்ந்த வழக்கறிஞர் அம்ஜத் அலி என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்த சென்னை காவல் ஆணையர், மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டுருந்த நிலையில், இரட்டை இருப்பிட சான்று மூலம் மருத்துவ படிப்பில் சேர முயற்சி செய்ததாக, ஆஷிக் கலைமான் எனும் மாணவ‌ருக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும் போலி இருப்பிடச்சான்று மூலம் ஏழு மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS