மருத்துவம் பயில போலி முகவரி: கேரள மாணவர்கள் விலகல்


தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக முறைகேட்டில் ஈடுபட்ட 4 மாணவர்கள் கலந்தாய்வுப் பட்டியலில் இருந்து விலகியுள்ளனர். 

தமிழக அரசு மற்றும் கேரள அரசு வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலை ஆராய்ந்து பார்த்ததில், 9 பேர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. கேரளாவில் மருத்துவப் படிப்பிற்கான இடம் கிடைப்பது கடினம் என்பதால், அவர்கள் தமிழகத்தில் போலியான இருப்பிட முகவரி பெற்று விண்ணப்பத்திருந்தார்கள் என குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அரசு வழக்கறிஞர் அம்ஜத் அலி என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்

இந்நிலையில், அந்த மாணவர்களிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், 4 பேர் போலிச் சான்றிதழ் அளித்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, கலந்தாய்வு பட்டியலில் இருந்து அந்த 4 மாணவர்கள் விலகினர். இந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS