படிப்பைவிட்டு பாதியில் வெளியேறினால்.... கல்வி கட்டணம் இனி திரும்ப கிடைக்கும்..!


பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்கள் அந்த படிப்பு வேண்டாம் என்று வெளியேறும்போது, கட்டிய பணத்தை கல்வி நிறுவனங்கள் திரும்பக் கொடுக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் அறிவித்துள்ளது.

அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் கீழ், இயங்கும் சில கல்வி நிறுவனங்கள், கல்வி ஆண்டு தொடங்கும் முன்னரே தொழில்நுட்பப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்கின்றனர். அந்த மாணவர்களிடமிருந்து முழு கட்டணத்தையும், பள்ளிச் சான்றிதழையும் வாங்கிக் கொள்கின்றன. எனவே, படிப்பு தொடங்கும் முன் ஒரு மாணவர், சேர்க்கையை திரும்பப் பெற்றால் ஆயிரம் ரூபாய் மட்டுமே கழித்துக் கொண்டு மீதமுள்ள தொகையைக் கொடுக்க வேண்டும் எனவும் அப்படி கொடுக்காத கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் எச்சரித்துள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS