மருத்துவ கலந்தாய்வு இன்று தொடக்கம்


நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

நேற்று வெளியிடப்பட்ட தரவரிசைப்பட்டியலில் ஓசூரை சேர்ந்த சந்தோஷ் என்ற மாணவர் 656 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். கோவையை சேர்ந்த முகேஷ் கண்ணா என்ற மாணவர் 655 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், 651 மதிப்பெண் பெற்ற திருச்சியைச் சேர்ந்த செய்யது ஹபீஸ் மூன்றாமிடமும் பிடித்தனர்.

மாநில பாடத்திட்டத்தில் படித்த 27,488 மாணவர்கள் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். சிபிஎஸ்இ-யில் பயின்ற 3 ஆயிரத்து 418 மாணவர்களும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.‌ கடந்தாண்டுகளில் பயின்று தற்போது விண்ணப்பித்த 5 ஆயிரத்து 636 பேரும் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது. நாளை முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வுகள் நடத்தப்படுகின்றன.

செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் மருத்துவ கலந்தாய்வை நடத்தி முடிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் காலஅவகாசம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

POST COMMENTS VIEW COMMENTS