நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி: ஆச்சரியப்படுத்தும் அரசுப்பள்ளி


நீட் தேர்வில் இருந்து விலக்கு தேவை, தேவையில்லை என்ற வாதங்களுக்கு மத்தியில் நீட்டுக்காக சிறப்பு பயிற்சி அளித்து மாணவர்களை தேர்ச்சி அடைய வைத்துள்ளது நெல்லை கல்வி மாவட்டம். அரசுப்பள்ளி மாணவர்களின் இந்த முயற்சி பலதரப்பினரிடமும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டே நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்குத்தான் விலக்கு என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டதால், மருத்துவம் படிக்க விரும்பிய மாநில பாடத்திட்ட மாணவர்களுக்காக பள்ளிக்கல்வித்துறையும், நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் இணைந்து அரசுப்பள்ளிகளில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்க ஆரம்பித்துவிட்டனர். இதன்படி பயிற்சி பெற்ற நெல்லை மாநகராட்சி கல்லணை அரசு மகளிர் பள்ளி மாணவிகள் 8 பேர் நீட் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மருத்துவ படிப்புக் கனவை நிறைவேற்றிக்கொள்ளும் ஆர்வத்தில் படித்த இந்த பள்ளியைச் சேர்ந்த 8 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கு ஆசிரியர்களின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது.

கிராமப்புற மாணவர்களுக்கு இடம் கிடைக்குமா? அரசு‌ பாடத்திட்ட மாணவர்களால் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியுமா என்ற கேள்விகளுக்கு அப்பாற்பட்டு, அர்ப்பணிப்புடன் படித்த இந்த மாணவிகளும் நீட்டில் தேர்ச்சி பெற்றதால், கலந்தாய்வில் தங்களுக்கு இடம் கிடைக்கும் நம்பிக்கையுடன் தயாராகி வருகிறார்கள்.

POST COMMENTS VIEW COMMENTS