நீட் அடிப்படையில் நாளை மறுநாள் மருத்துவ கலந்தாய்வு


மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு, நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நாளை மறுநாள் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நீட் தேர்விலிருந்து ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததால், தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் உடனடியாக மருத்துவ கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் மருத்துவ கலந்தாய்வை நடத்தி முடிக்கவும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் காலஅவகாசம் வழங்கியுள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நாளை பிற்பகல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்துள்ள தமிழக அரசு, நாளை மறுநாள் முதல் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS