அடுத்த ஆண்டு முதல் ஐஐடி நுழைவுத் தேர்வு ஆன்லைனில்!


ஐஐடியில் மாணவர் சேர்க்கைக்கான அ‌ட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வை, அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்த முடிவு ஐஐடி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஜேஇஇ பிரதான தேர்வை விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும் எழுதும் முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு ஆன்லைன் மூலம் ‌‌நடத்தப்படவிருக்கிறது. இதன்மூலம், ஐஐடி நுழைவுத் தேர்வில் முற்றிலும் ஆன்லைன் முறை கொண்டு வரப்படுவதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஜேஇஇ பிரதான தேர்வை 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய நிலையில், அதில், 10 சதவிகிதத்தினருக்கும் குறைவான மாணவர்களே ஆன்லைன் முறையை தேர்ந்தெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

POST COMMENTS VIEW COMMENTS