தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் - செங்கோட்டையன்


தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளும் தரம் உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபிச்செட்டிப்பாளையம் அருகே வெள்ளாளபாளையம் பகுதியில் புதிய சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் செங்கோட்டையன், தரம் உயர்த்தப்பட்ட பள்ளியின் கட்டிடங்களை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கல்வித்திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார். கல்வியினாலேயே மாநிலத்தின் முன்னேற்றம் சிறப்பானதாக இருக்கும் எனக் கூறிய செங்கோட்டையன் அதை நோக்கியே பயணித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS