அரசுப்பள்ளி ஆசிரியர்களை நிர்பந்திக்க முடியாது: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு


அரசுப்பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க நிர்பந்திக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

ஆங்கில வழி வகுப்புகளை தொடங்க அனுமதி வழங்க பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு உத்தரவிடக்கோரிய வழக்கில், ஜூன் 27ஆம் தேதி நீதிபதி கிருபாகரன் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதன் மூலம் அப்பள்ளிகளின் தரம் மேம்படும் என கருத்துத் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்த நீதிபதி, தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழக அரசு இன்று தாக்கல் செய்த பதில் மனுவில், அரசுப்பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க நிர்பந்திக்க முடியாது என்று கூறியுள்ளது.

அந்த மனுவில், அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தால் அதன் தரம் மேம்படும் என்ற நீதிமன்றத்தில் எதிர்ப்பார்ப்பு நியாயமானது. அதே சமயம், ஆசிரியர்களும் பெற்றோர் என்பதால், அவர்கள் பிள்ளைகளை எந்த பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது அவர்களது உரிமை என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் மனமாற்றம் ஏற்பட்டு, அவர்களாகவே சேர்க்க வேண்டுமே தவிர அரசு நிர்பந்திக்க முடியாது என அந்த மனுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS