நீட் விலக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்கள் உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிப்பு


நீட் தேர்விலிருந்து ஓராண்டு விலக்கு கோரும், தமிழக அரசின் அவசர சட்ட வரைவு மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சட்ட வரைவை இன்று காலை சமர்ப்பித்தார். இதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகம் கூடுதல் ஆவணங்களைக் கேட்ட நிலையில் அவையும் உடனடியாக சமர்ப்பிக்கப்பட்டன.

இதன்பின் அவசர சட்டத்தின் வரைவு‌ சட்டத்துறை, சுகாதாரத்துறை அமைச்சகங்களுக்கு அனுப்பப்படும்‌. இரு அமைச்சகங்களிலும் அவசர சட்ட வரைவு சரிபார்க்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

POST COMMENTS VIEW COMMENTS