'நீட் தேர்வில் ஓராண்டிற்கு விலக்கு': நிர்மலா சீதாராமன்


அரசு மருத்துவக் கல்லூரி இடங்களில் மட்டும் நீட் தேர்வில் இருந்து ஓராண்டிற்கு விலக்கு தர தயார் என்று, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை தாம்பரத்தில் செய்தியாளர்களை  சந்தித்த அவர், நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கிடையாது என்று உறுதிபடக் கூறினார். நீட் தேர்வில் அரசு மருத்துவக் கல்லூரி இடங்களுக்காக தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றினால், அதற்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS