நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது: உச்சநீதிமன்றம்


நடப்பாண்டு நடைபெற்ற நீட் தேர்வினை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்‌றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நீட் தேர்வில் மாறுபட்ட கேள்வி தாளை வ‌ழங்கியது ஏன்‌ என சிபிஎஸ்இக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மாறுபட்ட கேள்வி தாள்கள் வழங்கப்பட்டது‌ ஏற்புடையதல்ல என கூறிய நீதிபதிகள், இனி இது போன்ற தவறுகள் நேராமல் இருக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது என அறிக்கை தாக்கல் செய்ய சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டு ஆகஸ்ட் 19ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

கடந்த மே மாதம் நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் பிராந்திய மொழிகளில் அளிக்கப்பட்ட கேள்விகளில் முரண்பாடுகள் இருப்பதாக மாணவர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது. எனவே நீட் தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இதில் தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி அளித்து உத்தரவிட்டது. அதனடிப்படையில் நீட் தேர்வு முடிவுகளும் வெளியாகியிருந்தன.

POST COMMENTS VIEW COMMENTS