பொறியியல் கவுன்சிலிங்: 45% இடங்கள்தான் நிரம்பியது!


பொறியியல் பொதுக் கலந்தாய்வு நாளையுடன் நிறைவு பெறுகிறது. மொத்தமிருந்த 1 லட்சத்து 75 ஆயிரத்து 339 இடங்களில் 45 சதவிகித இடங்களே நிரம்பியுள்ளன. நேற்றைய கலந்தாய்வு வரை அழைக்கப்பட்ட ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 655 மாணவர்களில் 35 சதவிகிதமான, 43 ஆயிரத்து 794 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. 

12ஆம் வகுப்பில் துணைத் தேர்வெழுதிய மாணவர்கள் வரும் 16ஆம் தேதி பதிவு செய்துகொண்டு, 17ஆம் தேதி நடைபெற உள்ள கலந்தாய்வில் பங்கேற்கலாம். அதன் பிறகு 18ஆம் தேதி, எஸ்.சி அருந்ததியர் பிரிவில் நிரம்பாத இடங்களை எஸ்.சி பிரிவினருக்கு ஒதுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. அத்துடன் இந்தாண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு நிறைவு பெறுகிறது.

POST COMMENTS VIEW COMMENTS