பள்ளிகளில் கட்டாயமாகிறது யோகா


யோகா மற்றும் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் விதமாக அவற்றை பள்ளி குழந்தைகளுக்கு கட்டாயமாக்கும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் யோகா, ஜிம்னாஸ்டிக், நீச்சல் உள்ளிட்டவற்றில் ஏதேனும் இரண்டு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை அதிகபட்சம் 45 நிமிடம் வரை உடற்தகுதி விளையாட்டுகளை குழந்தைகள் மேற்கொள்வதை பள்ளிகள் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநில வழி கல்வி அமைப்புகளும் இத்தகைய உடல்திறன் செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS